Published : 12,Aug 2021 08:48 AM

நீலகிரி: ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் 10 வயது பெண் யானை உயிரிழப்பு

The-body-of-a-female-baby-elephant-who-died-of-anthrax-has-been-found-at-the-Erode-Nilgiris-district-border
ஈரோடு - நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தெங்குமரஹடா வனப்பகுதியில், ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்த, பெண் குட்டி யானையின் உடல் கண்டறியப்பட்டது.
 
10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தெங்குமரஹாடா கல்லாம்பாளையம் வனத்தில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இறந்து கிடந்த யானையின் உடலில் ஆந்தராக்ஸ் நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் யானையின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கவச உடைகள் அணிந்து வந்த வனத்துறை ஊழியர்கள், யானை உடலை அதே இடத்தில் எரியூட்டினர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்