[X] Close

கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு - தமிழக அரசு

தமிழ்நாடு

government-has-ordered-a-change-in-the-premium-for-covid19-treatment-coming-under-the-Chief-Minister-Medicare-scheme
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் வரும் கொரோனா சிகிச்சை கட்டணம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
 
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் நாள்தோறும் இருந்த கட்டணம் தொகுப்பு கட்டணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சைக்கு தினசரி கட்டணம் ரூ.35,000 என்பது தொகுப்பு கட்டணமாக ரூ. 56,200 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீவிரமில்லாத சிகிச்சைக்கு தினமும் ரூ.5,000 என இருந்த நிலையில் தொகுப்பு கட்டணமாக ரூ.3,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ.15,000 என இருந்த நிலையில் தொகுப்பு கட்டணமாக ரூ.7,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு தினமும் ரூ.30,000 என இருந்தது தொகுப்பு கட்டணமாக ரூ.27,100 ஆக மாற்றப்பட்டுள்ளது.
 
தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணமும் மாற்றப்பட்டுள்ளது. தீவிரமில்லாத ஆக்சிஜன் இல்லாத படுக்கை வசதி ரூ.3,000, தீவிரமில்லாத ஆக்சிஜன் உடனான படுக்கை வசதி ரூ.7,000, வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சை ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சையில் படிப்படியாக குறைப்பதற்கு மட்டும் கட்டணமாக ரூ.7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

Advertisement
[X] Close