[X] Close

தமிழகம்: கடந்த 24 மணி நேரத்தில் 1,964 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ்

Today-1964-People-tested-positive-for-COVID19-in-Tamil-Nadu-State-of-India

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,964 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 1,893 பேருக்கு தொற்று பதிவான நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைவிட இன்று 71 பேருக்கு கூடுதலாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 


Advertisement

கொரானாவுக்கு சிகிச்சை பலனளிக்காமல் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு 20,382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

image


Advertisement

அதோடு தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை பாதிப்பில் மீண்டும் தலைநகர் சென்னை முதலிடத்துக்கு வந்துள்ளது. சென்னையில் 243 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் இந்த எண்ணிக்கை 229 என உள்ளது. மேலும் 22 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. 


Advertisement

Advertisement
[X] Close