[X] Close

‘எதிர்க்கட்சிகளுக்கு நன்றி’ - நாடாளுமன்றக்குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில்  நாடாளுமன்றக்குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸின் சோனியா காந்தி, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, திமுகவின் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Advertisement

இந்த சந்திப்பு கூட்டத்தில் ஓபிசி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 15 நாட்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் குறித்து கேள்வி எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டிருந்தாலும் கூட நேற்றைய தினம், ஓபிசி மசோதா நிறைவேறுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து விவாதங்களில் பங்கேற்று உதவிபுரிந்திருந்தார்கள். எனவே இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளி காரணமாக 2 நாட்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் இந்த ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close