Published : 09,Aug 2017 05:13 AM
மழை வேண்டி மேள தாளம் முழங்க நடனம் ஆடி வழிபாடு

ஈரோடு மாவட்டம் குரும்பபாளையத்தில் மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் நடனம் ஆடி விநோத வழிபாடு நடத்தினர்.
ஊர் தெய்வங்களை குதூகலித்து கொண்டாடினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் விரதம் மேற்கொண்டு மேள தாளம் முழங்க, ஆட்டம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். மேலும் பவானி ஆற்றில் இருந்து பூஜிக்கப்பட்ட நீரை தீர்த்தக்குடம் மூலம் எடுத்து ஊர்வலமாக வந்த மக்கள், அம்மன் சிலை மீது நீரை ஊற்றி மழை வேண்டி வழிபட்டனர்.