[X] Close

அல்ஜீரியா: காட்டுத் தீயில் 25 ராணுவ வீரர்கள் உள்பட 42 பேர் உயிரிழப்பு

உலகம்

Algeria--Wildfires-kill-42--including-25-soldiers

அல்ஜீரியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயில் 25 ராணுவ வீரர்கள் உள்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

அல்ஜீரியா தலைநகர் அல்ஜயர்ஸுக்கு கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கபாயோ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் திங்கள்கிழமை முதல் தீ பரவி எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் காவலர்களுக்கு துணையாக ராணுவத்தினரும் களம் இறக்கப்பட்டனர்.

இதுவரை 100-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்ட நிலையில், ஒடிந்த மரக் கிளைகளைக் கொண்டு பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். எனினும் இந்த விபத்தில் 25 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் 17 பேரும் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் அப்தல்மத்ஜீத் தபூன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close