Published : 09,Aug 2017 03:34 AM

ஸ்டைலிஷ் மகேஷ்பாபு, மிரட்டல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா...வெளியானது டீசர் 

spyder-teaser-released

மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ள படம் ஸ்பைடர். மகேஷ்பாபுவின் பிறந்தநாளான இன்று படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டைலிஷான தோற்றத்தில் மகேஷ்பாபு, மிரட்டலான வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, வெகுளியான ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் என ‘ஸ்பைடர்’டீசர் மகேஷ்பாபு ரசிகர்களுக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் மகேஷ்பாபு பேசி நடித்திருப்பது தமிழ் ரசிகர்களிடமும் ஆச்சர்யத்தையும் எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இறைவி படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா ‘ஸ்பைடர்’ படம் மூலம் நிச்சயம் அனைவரையும் மகிழ்விப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்த சில படங்கள் கைகொடுக்காத நிலையில் ‘ஸ்பைடர்’ படம்  நல்ல ஒரு ரீ-என்ட்ரியாக  அமையும் என்று நம்புகிறார்.      

டீசர் வெளியானது முதல் ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்