ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை காதலுக்காக உதறிய பெண்

ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை காதலுக்காக உதறிய பெண்
ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை காதலுக்காக உதறிய பெண்

காதலுக்கு பணம் முக்கியமில்லை என்பதை மலேசிய தொழிலதிபர் ஒருவரின் மகள் நிரூபித்துள்ளார். 

மலேசிய செல்வந்தர்களில் ஒருவரும், ஆயிரத்து 890 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியுமான கே பெங் என்பவரின் மகள் ஏஞ்சலின் பிரான்சிஸ்கோ. இவர் பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது கரீபியன் நாட்டின் எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஜெடிடியா பிரான்சியஸ் என்பவரை காதலித்தார். இவரது திருமணத்திற்கு ஏஞ்சலினின் தந்தை சம்மதிக்காததால், தனது சொத்துக்களை உதறிவிட்டு காதலனையே மணமுடித்துள்ளார். இங்கிலாந்தில் காதலன் பணிபுரியும் கல்லூரியின் சிற்றாலயத்தில் மிக மிக எளிய முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை கொண்ட தொழிலதிபர் மகளின் திருமணம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்றது. அதுவும் 30 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். பெண் வீட்டார் தரப்பில் ஒருவரும் பங்கேற்கவில்லை. காதலுக்கு பணம் முக்கியமில்லை என்பதற்கு சான்றாக இருக்கும் ஏஞ்சலின் பிரான்சிஸ்கோ-வை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் வியப்பாக பாராட்டி வருகின்றனர்.


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com