[X] Close

நாளை வெளியாகும் சீனு ராமசாமி - ஜிவி பிரகாஷ் படத் தலைப்பு

சினிமா

director-seenu-ramasamy-and-gv-prakash-new-movie-title-look-will-be-revealed-tomorrow

இயக்குநர் சீனு ராமசாமி - ஜி.வி பிரகாஷ் இணையும் புதிய படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது.


Advertisement

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், தற்போது சீனு ராமசாமி ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் ஜி.வி பிரகாஷுடன் இணைந்திருக்கிறார். இதுவரை வந்த சீனு ராமசாமியின் படங்களில் சற்று மாறுதலாக, ஆக்‌ஷன் த்ரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படம் என்று சொல்லப்படுகிறது. ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் இப்படத்தை தயாரிக்கிறார்.

image


Advertisement

இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களாக தேனியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நாளை படத்தின் தலைப்பு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு. சீனு ராமசாமி படத்தலைப்புகள் அனைத்துமே இதுவரை கவனம் ஈர்க்கும் தலைப்புகளாகத்தான் இருந்திருக்கின்றன. அந்த வகையில், இப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


Advertisement

Advertisement
[X] Close