[X] Close

மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.2.5 கோடி மோசடி - 3 பேர் மீது புகார்

குற்றம்

2-5-crore-fraud-at-chennai

தமிழகம் முழுவதும் வாய் பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைவுற்றோரை குறிவைத்து 2.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்னை கொளம்பாக்கத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாத சங்கத்தின் விளையாட்டு பிரிவில் செயலாளராக இருந்து வரும் இவரை அணுகிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான ரோகன் என்பவர், துபாய் பங்கு சந்தையில் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 45 நாட்களில் இரு மடங்கு தொகை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். சந்தோஷ் 1 லட்சம் ரூபாயை செலுத்திய நிலையில் 45 நாட்களில் 1.80 லட்சம் ரூபாய் தந்துள்ளார் ரோகன்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாத சங்கத்தைச் சேர்ந்த பல பேரை பணம் செலுத்த சந்தோஷ் வற்புறுத்தி உள்ளார். சந்தோஷை நம்பி பலர் 2.5 கோடி ரூபாய் வரை ரோகனிடம் செலுத்தியுள்ளனர். குறிப்பிட்ட காலத்தில் பணம் வராததால், தாங்கள் ஏமாற்றப்பட்ட நிலையில், ரோகன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சரண் மற்றும் அவரது மனைவியான சாரதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சந்தோஷ்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close