[X] Close

இந்தியா: கடந்த 147 நாட்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு குறைந்தது

கொரோனா வைரஸ்

india-corona-virus-update

இந்தியாவில் கடந்த 147 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா தொற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

நேற்று ஒரு நாளில் 28,204 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 147 நாட்களில் இல்லாத குறைந்த அளவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 373 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,19,98,158 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,511 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,11,80,968 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 51, 45,268 ஆக உயர்ந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close