[X] Close

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி - மத்திய அரசு

கொரோனா வைரஸ்

Vaccination-for-foreigners-residing-in-India

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினரும் கோவின் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Advertisement

வெளிநாட்டினர் தங்களது பாஸ்போர்ட்டுகளை அடையாள ஆவணமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவின் இணையதளத்தில் பதிவு செய்துகொண்ட பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க அளவு வெளிநாட்டினர் இந்தியாவில் வசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், அவர்கள் மூலமாக தொற்று பரவுவதை தடுக்கவும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close