Published : 09,Aug 2021 06:56 PM

ஒரே இடத்தில் நடைபெறும் அல்லு அர்ஜுன் - அல்லு அர்ஹா படங்களின் படப்பிடிப்புகள்

allu-arjun-and-his-daughter-Allu-Arha-were-shooting-at-the-same-location-for-their-respective-movies

ஒரே படப்பிடிப்புத் தளத்திலேயே நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ பட படப்பிடிப்பும், அவரது மகள் அல்லு அர்ஹா நடித்துவரும் ’சகுந்தலம்’ படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதேசமயம், அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக ’சகுந்தலம்’ படத்தில் நடித்து வருகிறார்.

image

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடந்துள்ளது. தற்செயலாக நடந்த இந்த சம்பவத்தை நடிகர் அல்லு அர்ஜுன் “நானும் எனது மகளும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக்கொள்வது என்பது 15 வருடங்கள் அல்லது 20 வருடங்கள் கழித்து நடக்கும் என்று நினைத்தேன். ஆனால், விரைவில் நடந்துவிட்டது. புஷ்பா, ’சகுந்தலம்’ பரதாவை இன்று சந்தித்தார். மறக்கவே முடியாத தற்செயல் நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

image

இதற்கு முன்னதாக, நடிகை சமந்தா தெலுங்கில் ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் பிரபல இயக்குநர் குணசேகர் மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படத்தை இயக்கி வருகிறார்.

image

இப்படத்தில்தான், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஹா தற்போது 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்