[X] Close

கொரோனா மாறுபாடுகளுக்கு நட்சத்திர கூட்டங்களின் பெயர்களை வைக்க உலக சுகாதார அமைப்பு பரிசீலனை

கொரோனா வைரஸ்

World-Health-Organization-is-considering-naming-star-clusters-for-corona-variations
கொரோனா மாறுபாடுகளுக்கு நட்சத்திர கூட்டங்களின் பெயர்களை வைக்க, உலக சுகாதார அமைப்பு பரிசீலித்து வருகிறது.
 
கொரோனா வைரஸ் படிப்படியாக உருமாற்றம் அடைந்து, பல்வேறு வடிவங்களில் மக்களை தாக்கி வருகிறது. இந்த மாறுபாடுகளை வகைப்படுத்துவதற்காக கிரேக்க எழுத்துக்களை கொண்டு பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கிரேக்க எழுத்து வரிசையில் 24 எழுத்துக்கள் உள்ளன.
ஆனால் கொரோனா தொடர்ந்து மாறுபாடு அடைவதால், இந்த எழுத்துக்களுக்குப் பிறகும் பெயர்கள் தேவைப்படும் எனத் தெரிகிறது. அவ்வாறு தேவைப்பாட்டால், நட்சத்திர கூட்டங்களின் பெயர்களை சூட்டுவதற்கு பரிசீலிப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கிரேக்க கடவுள் அல்லது பெண் தெய்வங்களின் பெயர்களை சூட்டவும் யோசனை இருப்பதாக உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
[X] Close