Published : 09,Aug 2021 10:56 AM

கொரோனா பரவல் தடுப்பு: ரயில் நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

வெளிமாநிலத்தவர் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

சென்னையில் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்த நிலையில் மூடப்பட்டிருந்த 9 இடங்களில் வணிக நடவடிக்கைகளுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் சேகர் பாபு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.

image

வெளிமாநிலத்தவர் மூலம் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பயணிகளுக்கு ரயில் நிலையத்திலே பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்