[X] Close

சங்கமித்ராவில் இல்லை.. உறுதிப்படுத்திய ஹன்சிகா!

Not-in-Sangamitra----Confirmed-Hansika-

சங்கமித்ரா படத்தில் ஹன்சிகா நடிக்கவில்லை என்பதை அவர் தரப்பு உறுதி செய்துள்ளது. 
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.400 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக்க உள்ள படம் சங்கமித்ரா.  சுந்தர் சி  இயக்க இருக்கும் இந்தப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அந்தப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த ஸ்ருதிஹாசன் விலகினார். அவரது பாத்திரத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும்,  ஹன்சிகா  நடிக்க இருப்பதாகவும், அதற்காக போட்டோஷூட் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.
அதனை படக்குழுவினர் உறுதி செய்யாத நிலையில், சங்கமித்ரா படத்தில் ஹன்சிகா நடிக்கவில்லை என்பதை அவரது தரப்பினர் உறுதி செய்துள்ளனர். மேலும், சங்கமித்ரா நடிகை தேர்வு தொடர்ந்து நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப்படத்தில், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க உள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close