[X] Close

சென்னை: கொலை செய்யப்பட்ட மகன் - துக்கம் தாளாமல் தந்தை எடுத்த விபரீத முடிவு

தமிழ்நாடு

Father-commits-suicide-without-mourning-due-to-Son-murdered

மகன் கொலை செய்யப்பட்ட துக்கத்தால் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.


Advertisement

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பாடி புதுநகரைச் சேர்ந்தவர் திருமால் வளவன் (48). லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவருடைய மகன் பிரகதீஸ்வரன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மகன் கொல்லப்பட்டதையடுத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் திருமால் வளவன். இதையடுத்து நேற்று வீட்டில் திருமால் வளவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Advertisement

தகவல் அறிந்ததும் ஜெஜெ நகர் போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close