விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் உறுதி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் உறுதி
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் உறுதி

விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படாது என்றும் இலவச மின்சாரம் தொடரும் எனவும் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்.

விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படுவது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் புதிய தலைமுறை களஆய்வு நடத்தியது. இது தொடர்பாக, புதிய தலைமுறைக்கு தொலைபேசியில் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,  விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்பட மாட்டாது என்றார்.  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மாதிரி அடிப்படையில் ஓரிரு இடங்களில் மீட்டர் வைக்கப்பட்டதாகவும் அவை அகற்றப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உதய் திட்டத்தில் பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் தங்கமணி, எக்காரணத்தை கொண்டும் மீட்டர் வைக்க மாட்டோம் எனக் கூறித்தான் கடைசியாக உதய் திட்டத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்தார். 100 சதவிகிதம் விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் வைக்கப்படாது என கூறிய அமைச்சர், மீட்டர் வைப்பது குறித்து புகார் கூறினால் உடனடியாக கவனிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com