[X] Close

பஞ்சாப்: இளைஞர் அகாலி அமைப்பின் தலைவர் சராமரியாக் சுட்டுக்கொலை

குற்றம்

Youth-Akali-leader-shot-to-dead-by-unknowns-at-Punjab

பஞ்சாபில் அகாலி இளைஞர் அமைப்பின் தலைவர்களில் ஒருவர் சராமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

பஞ்சாப் மாநிலம் மோகாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்ரம்ஜித் சிங் மிட்டுகேரா என்கிற விக்கி மிட்டுகேரா. இவர் இன்று காலை மதாவூர் பகுதியிலுள்ள மார்கெட் ஒன்றுக்கு சொத்து தரகர் ஒருவரை சந்திக்கச் சென்றிருக்கிறார். அவர் தனது வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் ஏற்கெனவே அவருக்காக காந்திருந்த சிலர் துப்பாக்கியை எடுத்து சராமரியாக சுட்டுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. அவருடைய உடலில் குண்டுகளால் 20 துளைகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close