
நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். காணொலிக் காட்சி மூலம் நாளை மாலை 7 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 71-வது சுதந்தர தினம் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர மாவட்ட நிர்வாக நிலவரம் குறித்தும் பிரதமர் கேட்டறிவார் எனத் தெரிகிறது.