[X] Close

அமேசானுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வணிகம்

Supreme-Court-upholds-Singapore-order-against-Reliance-Future-Retail-deal

ஃபியூச்சர் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என அமேசான் நிறுவனத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Advertisement

ஃபியூச்சர் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துடன் இணைப்பதற்காக 24,731 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, தங்களுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை ஃபியூச்சர் ரீடெயில் நிறுவனம் மீறிவிட்டதாக அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், ஃபியூச்சர்- ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு தடை விதித்தது.

சிங்கப்பூர் நடுவர் நிதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி அமேசான் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த தனிநீதிபதி, அந்த உத்தரவை அமல்படுத்த ஃபியூச்சர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இந்திய சட்டங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த முடியாது என்று உத்தரவிடக்கோரி ஃபியூச்சர் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதில், தற்போதைய நிலை தொடர வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


Advertisement

இந்த உத்தரவை எதிர்த்து அமேசான் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிங்கப்பூர் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியச் சட்டங்களின் கீழ் அமல்படுத்தலாம் என தெரிவித்தனர். இதன்மூலம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைவதற்காக ஃபியூச்சர் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close