Published : 07,Aug 2021 10:59 AM

கர்நாடகா: ஓட்டுநரை கட்டிப்போட்டு ரூ.6.5 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

கர்நாடக மாநிலம் கோலார் அருகே கண்டெய்னர் லாரி ஓட்டுநரை கட்டிப்போட்டு, 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் இருந்து, 6.5 கோடி மதிப்பிலான மொபைல்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டன. கர்நாடக மாநிலம் கோலார் அருகேயுள்ள முளுபாகல் என்ற இடத்தில் சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பல் கண்டெய்னர் லாரியை வழிமறித்துள்ளது. ஓட்டுநரை அடித்துக் கட்டிப்போட்ட அவர்கள், கண்டெய்னர் லாரில் இருந்த செல்போன்களை வேறு லாரிக்கு மாற்றி, அதனை கொள்ளையடித்தனர்.

image

மறுநாள் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்டகப்பட்ட லாரி ஓட்டுநர் சுரேஷ், நடந்த சம்பவம் தொடர்பாக முளுபாகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் நிறுவனத்தில் பணியாற்றும் நபர்களில் ஒருவர், கொள்ளை கும்பலுடன் தொடர்பில் இருக்கலாம் என்றும், அவர் அளிக்கும் தகவலின்பேரில் வழிப்பறி கொள்ளை நடந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்