Published : 07,Aug 2021 08:09 AM

சத்தியமங்கலம்: லாரியில் இருந்த கரும்பை ரசித்து ருசித்த யானைகள்; போக்குவரத்து பாதிப்பு

Wild-elephants-overtook-a-lorry-carrying-sugarcane-near-Satyamangalam-and-ate-it
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை காட்டு யானைகள் வழிமறித்து, கரும்புகளை எடுத்து தின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி செல்லும் கரும்பு லாரிகளில் இருந்து கரும்புத் துண்டுகள் சாலையில் சிதறி விழுவதால், அவற்றை உண்பதற்காக காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ளன.
 
இந்நிலையில் ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே குட்டியுடன் நின்றிருந்த காட்டு யானை அவ்வழியே சென்ற கரும்பு லாரியை வழிமறித்து கரும்புத் துண்டுகளை எடுத்துத் தின்றபடி சாலையில் நின்றதால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்