[X] Close

விவேகம் படத்தில் அஜித்திற்கு பிடித்த பாடல் எது தெரியுமா? 

Ajith-s-favorite-song-in-Vivegam

அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் அனைத்துப்பாடல்களும் நேற்று இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. 


Advertisement

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன. முன்பு ஒவ்வொரு பாடலாக மூன்று பாடல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து வெளியானது அந்தப்படல்களில் பாப் பாடகரான யோகி.பி பாடிய ’சர்வைவா’ சிங்கிள் ட்ராக் முதலில் வெளியாகி வைரலானது. 

தலை விடுதலை, காதலாட என அனைத்துப்பாடல்களும் ஹிட்டடித்த நிலையில் அந்தப் பாடல்களில் அஜித்துக்கு பிடித்த பாடல் எது என்கிற தகவல் தற்போது  தெரிய வந்துள்ளது. 


Advertisement

இதுகுறித்து பாடகர் யோகி.பி கூறுகையில், ‘ சர்வைவா பாடலை ரெகார்ட் செய்து முடித்து அதை அனிருத் இயக்குநர் சிவாவிற்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தார். அந்தப்படலை அஜித்தும், சிவாவும் கேட்டுவிட்டு, அனிருத்துக்கு போன் செய்த  அஜித், ‘இந்தப்பாடல் அருமையாக இருக்கிறது. உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. முழுதிருப்தி. இது என்னுடைய ஃபேவரைட் பாடலாகி விட்டது’என பாராட்டியதாக அனிருத் என்னிடம் கூறினார். ஆக விவேகம் படத்தில் அஜித்திற்கு பிடித்த பாடலாக சர்வைவா பாடல் அமைந்து விட்டது. 


Advertisement

Advertisement
[X] Close