
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கான தகுதி சுற்றில் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது. ஜேக்கப், ஆரோக்கிய ராஜீவ், டாம், முகமது அனாஸ் ஆகிய இந்திய வீரர்கள் அடங்கிய குழு இதில் பங்கேற்று விளையாடியது.
பந்தய தூரத்தை 03:00:25 கடந்து அசத்தியது இந்திய அணி. மூன்றாவது இடம் பிடித்த பெல்ஜியத்திற்கும், இந்தியாவுக்கு வெறும் 1 நிமிடமும், சில மைக்ரோ செகண்டுகளும் தான் வித்தியாசம். பெல்ஜியம் பந்தய தூரத்தை 02:59.37 கடந்திருந்தது.
இதன் மூலம் இந்த சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த போலந்து, ஜமைக்கா மற்றும் பெல்ஜியம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.