அணு ஆயுதப் போரை தூண்டுகிறது அமெரிக்கா: வடகொரியா குற்றச்சாட்டு

அணு ஆயுதப் போரை தூண்டுகிறது அமெரிக்கா: வடகொரியா குற்றச்சாட்டு
அணு ஆயுதப் போரை தூண்டுகிறது அமெரிக்கா: வடகொரியா குற்றச்சாட்டு

கொரியப் பிராந்தியத்தில் அணு ஆயுதப் போரை அமெரிக்கா தூண்டி விடுவதாக வடகொரியா குற்றம்சாட்டியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதாரத் தடைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று வடகொரியா எச்சரித்திருக்கிறது. ஒரு நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்டிருக்கும் கொடூரமான தாக்குதல் இது என்றும் அந்த நாடு கூறியிருக்கிறது.

வடகொரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விதித்துள்ளது.

இந்த பொருளாதாரத் தடையை கொண்டுவர போடப்பட்ட தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு அவையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. வடகொரியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத் தாது, காரீயம், கடல் உணவுகள் போன்றவற்றைக் குறிவைத்து இந்தப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் வடகொரியாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்படும் என ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலே தெரிவித்தார். ஏவுகணைச் சோதனைக்காக ஒரு நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் இதுவே மிகப்பெரியதாகும். அணு ஆயுதச் சோதனையில் ஈடுபடுவதாக வடகொரியா மீது அவ்வப்போது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில கொரியப் பிராந்தியத்தில் அமெரிக்காதான் அணு ஆயுதப் போரைத் தூண்டுகிறது என வடகொரியா குற்றம்சாட்டியிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com