[X] Close

சென்னை: வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு - கொலையா என போலீஸ் விசாரணை

தமிழ்நாடு

Police-investigation-on-skeleton-found-in-a-house-at-Chennai

சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு வீட்டில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலையா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement

சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (45). மாதவரத்தில் இருக்கக்கூடிய இவருக்கு சொந்தமாக இடத்தில் பிரச்னை நிலவி வருவதால் மகேஷ் தனது தாய்மாமன் கண்ணனை சந்திப்பதற்காக அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பின்பகுதியில் வீடு குப்பையாக இருந்ததால் சுத்தம் செய்துள்ளார். சுத்தம் செய்யும்போது எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மகேஷ் உடனே அமைந்தகரை காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையில் மகேஷின் சகோதரரான ரமேஷ்(49) தாய்மாமன் வீட்டின் பின்பகுதியில் நீண்ட வருடங்களாக குடியிருந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரமேஷிற்கு திருமணம் ஆகவில்லை. 3600 சதுர அடிகொண்ட இந்த வீட்டை ரமேஷின் தாத்தா, தாய்மாமனான கண்ணனுக்கு எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த இடம் தொடர்பாக கண்ணனுக்கும், ரமேஷுக்கும் இடையே நீண்ட வருடங்களாக பிரச்னை நிலவி வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு கண்ணனுக்கு இந்த வீடு சொந்தமானது என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது.


Advertisement

image

இதனையடுத்து ரமேஷ் பின்பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு திடீரென ரமேஷ் காணாமல் போனதாக தாய்மாமன், மகேஷிடம் தகவல் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் மகேஷ் பல இடங்களில் தேடியும் ரமேஷ் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுத்தம் செய்யும்போது எலும்புக்கூடு தனது சகோதரனை போல் இருப்பதாக புகார் அளித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட எலும்புக்கூட்டை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். சொத்து பிரச்னைக்காக தாய்மாமன் கொலை செய்தாரா அல்லது வேறு நபரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close