[X] Close

ஆக.14 நள்ளிரவில் சட்டசபையில் சிறப்பு விழா கொண்டாட முடிவு

தமிழ்நாடு

tamilnadu-government-Decided-to-celebrate-the-special-ceremony-in-the-Assembly-at-midnight

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சட்டசபையில் வருகிற 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு விழாவை நடத்த அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஆகஸ்ட் 14ஆம் தேதியோடு 100 நாட்கள் நிறைவடைகிறது. அதே தேதி இரவில், இந்தியா சுதந்திரம் பெற்று 75ஆண்டுகள் ஆகிறது. எனவே இந்த தொடர் நிகழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய விழாவாக கொண்டாட அரசு முடிவெடித்திருப்பதாக தெரிகிறது.

image


Advertisement

அதன்படி,14ஆம் தேதி நள்ளிரவில் சட்டசபையில் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட அரசு தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க தமிழக ஆளுநர் அழைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. கடந்த 1972ஆம் ஆண்டு இந்தியாவின் 25-வது சுதந்திர தினத்தை, அப்போதைய முதல்வர் கருணாநிதி நள்ளிரவில் கொண்டாட ஆணை பிறப்பித்தார். அதே போல, 1987ஆம் ஆண்டிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சட்டசபையில் நள்ளிரவில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close