[X] Close

சென்னை: தனியாக இருக்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நகை, பணம் திருடிய நபர் கைது

குற்றம்

Man-arrested-for-sexually-abusing-single-women-and-stealing-jewelery-and-money

சென்னையில் வீடு புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பணம், நகை திருடும் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

சென்னை வடபழனியைச் சேர்ந்த மோகன் வடிவேல் என்பவர் கடந்த மாதம் 21ஆம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் குடும்பத்துடன் ஊருக்கு சென்றிருந்த போது வீட்டில் இருந்த 3 சவரன் நகை, 4500 பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையன் திருடிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதேபோல் அதே பக்தவச்சலம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார் வீட்டிலிருந்த 3 சவரன் நகை, ரூ. 8 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றதாக புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வடபழனி தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இரண்டு வீட்டிலும் கைவரிசை காட்டியது ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சியில் பதிவான முக அடையாளங்களை வைத்து பழைய குற்றவாளிகளின் முகத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது வீட்டில் புகுந்து திருடும் பிரபல கொள்ளையன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அறிவழகன் என்பது தெரியவந்தது.


Advertisement

image

இதனையடுத்து அறிவழகனை போலீசார் தீவிரமாக தேடியபோது திருட்டு வழக்கில் கைது செய்யபட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்களுக்கு முன்பு வெளியே வந்தது தெரியவந்தது. பின்னர் அறிவழகன் ஓசூரில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், ஓசூரில் வைத்து அறிவழகனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யபட்ட அறிவழகன் பட்டதாரி என்பதும், இவர் மீது சைதாப்பேட்டை, கிண்டி உட்பட பல காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அறிவழகன் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு உள்ளே புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து பின்னர் நகை, பணத்தை மிரட்டி பறித்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டவர்.


Advertisement

மேலும் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி மிரட்டி அறிவழகன் பணப்பறிப்பில் ஈடுபட்டும் வந்துள்ளார். இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதனால் 2019, 2021ஆம் ஆண்டு அன்பழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பழைய பாணி திருட்டில் ஈடுபட்டால் சிக்கிவிடுவோம் என்பதால், வடபழனியில் பூட்டியிருந்த வீட்டில் புகுந்து கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்தார். இவரிடமிருந்து 10 சவரன் நகை மற்றும் 90 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அறிவழகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close