[X] Close

மதுரை: சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 2 கோடி மோசடி - தம்பதி கைது

குற்றம்

Madurai-Running-a-cinema-style-financial-institution-Rs-2-crore-fraud-couple-arrested

ஒருவரை ஏமாற்ற அவரது ஆசையை தூண்டி நம்பிக்கையை ஏற்படுத்தினாலே அவரை சுலபமாக ஏமாற்றலாம் என சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் வசனத்தை போல மதுரையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகஅளவில் பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி பலரை ஏமாற்றி 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை மதுரை பொருளாதார குற்றப் பிரிவினர் கைது செய்தனர்.


Advertisement

மதுரை பெத்தானியபுரம் பகுதியில் இயங்கிவந்த தனியார் நிறுவனத்தில் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை என்கிற பெயரில் ஆர்வமுடையவர்களை உறுப்பினர்களாக சேர்த்து அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை உறுப்பினர்களுக்கு பங்கீடு செய்து வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இவரை நம்பி அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்த ஈஸ்வரி என்பவருக்கு உரிய பங்கீடு தொகையை தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட ஈஸ்வரி மதுரையில் உள்ள பொருளாதார குற்ற பிரிவினருக்கு புகார் அளித்துள்ளார்.


Advertisement

அந்த புகாரின் அடிப்படையில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் பங்குதாரர்கள் என ஐந்து பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்நிறுவனம் இரண்டு கோடிக்கும் மேல் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட மதுரை பெத்தானியபுரத்தில் இயங்கி வந்த பாரத மாதா பவுண்டேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி இந்திரா பானுமதி ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்

இந்நிறுவனத்தில் பணத்தை செலுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் தங்களிடம் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

மேலும் அதிக லாபம் மற்றும் அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்யும் மோசடி நிறுவனங்களின் போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை ஏமாற வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close