[X] Close

சிம்பு - கெளதம் மேனன் படத்தலைப்பு மாற்றம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு

சினிமா

Simbus-Nadhigalilae-Neeradum-Suriyan-Title-To-Be-Changed

கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கும் ‘சிம்பு 47’ படமான ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தலைப்பு மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.


Advertisement

கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ வெற்றிக்குப்பிறகு சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மீண்டும் இணைந்தார்கள்.

image


Advertisement

இந்த நிலையில், மீண்டும் சிம்பு-கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் இணைந்தனர். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ தலைப்பு மாற்றப்பட்டிருப்பதாகவும் புதிய தலைப்பு இன்று இரவு அல்லது நாளைக்குள் வெளியாகும் தகவல் வெளியாகி இருந்தது.

அதனை உறுதி செய்யும் வகையில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'நதிகளிலே நீராடும் சூரியன்' தலைப்பை மாற்றி புதிய தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நாளை 12.15 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளார்கள். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close