மின் அலுவலகங்களில் அமைச்சர் ஆய்வு - மதுபோதையில் பணியில் இருந்த ஊழியர் சஸ்பெண்ட்

மின் அலுவலகங்களில் அமைச்சர் ஆய்வு - மதுபோதையில் பணியில் இருந்த ஊழியர் சஸ்பெண்ட்
மின் அலுவலகங்களில் அமைச்சர் ஆய்வு - மதுபோதையில் பணியில் இருந்த ஊழியர் சஸ்பெண்ட்

சென்னையில் மின் அலுவலங்களில் நள்ளிரவில் திடீரென ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, குடிபோதையில் பணியில் இருந்த ஊழியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

சென்னையில், அவ்வப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு நேற்றிரவு 11 மணி அளவில் சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, கட்டுபாட்டு அறையில் நிகழும் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, பொதுமக்களிடத்தில் இருந்து வந்த அழைப்பு ஒன்றை எடுத்த அமைச்சர், அந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கூறினார்.

தொடர்ந்து வடசென்னை பகுதிக்கு உட்பட்ட கொருக்குபேட்டை துணை மின் அலுவலகத்திற்கு சென்றார். அமைச்சரின் வருகையை சற்றும் எதிபாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போயினர். அங்கு மதுபோதையில் பணியில் இருந்த ஜெகன் என்ற ஊழியரை பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், தண்டையார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட கருணாநிதி நகர் பகுதியில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அறிந்த அமைச்சர், அங்கு மின் இணைப்பு சரி செய்யும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புகார்களை மெத்தனமாகக் கையாண்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com