பத்திரிகை அடித்து காது குத்தி நூதன முறையில் போராட்டம்

பத்திரிகை அடித்து காது குத்தி நூதன முறையில் போராட்டம்
பத்திரிகை அடித்து காது குத்தி நூதன முறையில் போராட்டம்

சாதிச் சான்றிதழில் இலவசக் கல்வியை பறிக்கும் டிஎன்சி திட்டத்தை நீக்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் சீர்மரபினர் சங்கத்தினர் காதுகளை குத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சீரமைப்பினர் பட்டியலில் 68 சாதியினர் உள்ளனர். இவர்களுக்கு 1979 வரை டிஎன்டி என்ற சாதி சான்றிதழ் கொடுக்கப்பட்டு இலவச உயர் கல்வி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டிஎன்டி என்ற சாதி சான்றிதழை டிஎன்சி என்று யாரும் கவனிக்காத வகையில் மாற்றம் செய்து மத்திய அரசு பரிந்துரைத்ததாக பொய்யான காரணத்தை கூறி இலவச உயர் கல்வியை அதிகாரிகள் பறித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சீர்மரபினர் நல சங்கத்தினர் பலமுறை தமிழக அரசிடம்  எடுத்துரைத்தும் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தங்களது கோரிக்கைக்கு காது குத்தும் விதமாகவே தமிழக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி சீர்மரபினர், காது குத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com