எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் - இந்தியாவை மீண்டும் எச்சரித்த சீனா

எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் - இந்தியாவை மீண்டும் எச்சரித்த சீனா
எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் - இந்தியாவை மீண்டும் எச்சரித்த சீனா

டோக்‍லாம் எல்லைப் பகுதியில் குவிக்‍கப்பட்டிருக்‍கும் இந்திய ராணுவம் வெளியேறாவிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியா-சீனா-பூட்டான் எல்லையில் உள்ள டோக்‍லாம் பகுதியில் அண்மையில் சீனா சாலை அமைக்‍கும் பணியில் ஈடுபட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா அந்த பகுதியில் ராணுவ படைகளை குவித்தது. டோக்லாம் பகுதியில் குவித்துள்ள ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் இந்தியா தரப்பில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. இதுதொடர்பாக சீனா ஏற்கனவே இந்தியாவை எச்சரித்திருந்த நிலையில், தற்போது இந்திய ராணுவம் டோக்லாம் எல்லையிலிருந்து வெளியேறாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்‍க நேரிடும் என்று மீண்டும் சீனா எச்சரித்துள்ளது. இதனால், இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com