வட இந்தியாவில் பெய்து வரும் கன மழையால் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
ராஜஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பாரன் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல குடிசை வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிசான்கஞ்ச் பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும், அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் செல்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மழை வெள்ளத்தால் பல வீடுகளுக்குள் நீர் புகுந்தது. பான்டு நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக கங்கை நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கன மழையால் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மற்றும் சம்பல் பகுதிகளில் உள்ள 1,170 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 1,600 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளத்தால் தொடர்ந்து தத்தளித்து வருகின்றன.
மேற்கு வங்கத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தாமோதர் பள்ளத்தாக்கு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஹூக்ளி, ஹவுரா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
Loading More post
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்