[X] Close

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை புரட்டியெடுத்த பெற்றோர்

sexual-harrasement-to-student

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பள்ளி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி ஆசிரியரை அடித்து உதைத்த பெற்றோர் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

கொங்கணாபுரம் ஊரா‌ட்சி கச்சுப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் அர்த்தநாரி என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் சுந்தர வடிவேலுவிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து ஆசிரியரை கண்டித்த தலைமை ஆசிரியர், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று எழுதியும் வாங்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில் மீண்டும் ஆசிரியர் அர்த்தநா‌ரி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியரை தாக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி‌ அலுவலர், அர்த்தநாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதை அடுத்து ‌பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close