[X] Close

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்துடன் மோதும் ‘கேஜிஎஃப் 2’?

சினிமா

Kgf-2-to-be-released-on-Allu-Arjun---s----Pushpa----film-date

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்துடன், யஷ்ஷின் ‘கேஜிஎஃப் 2’ தியேட்டரில் நேரடியாக மோதுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா’ இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ’புஷ்பா’ செம்மரக்கட்டைக் கடத்தல் கதைக்களத்தைக் கொண்டது என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’ படமும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் மாதம் வெளியாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 16-ஆம் தேதி வெளியாகவிருந்த ‘கேஜிஎஃப் 2’ கொரோனா பரவலால் வெளியாகவில்லை. ‘புதிய வெளியீட்டுத் தேதி அறிக்கப்படும்’ என்று சமீபத்தில் அறிவித்திருந்தார் பிரஷாந்த் நீல் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

image

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ‘கேஜிஎஃப் 2’வும் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு படங்களும் ஒன்றாக மோதவிருக்கின்றன என்று தகவல்கள் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.


Advertisement

Advertisement
[X] Close