[X] Close

நாகை: மக்களின் உடைமைகளை திருட முயன்ற ஊர்க்காவல் படை வீரர்

குற்றம்

நாகை அருகே கடற்கரைக்கு வந்த பொதுமக்களின் பணப்பை உள்ளிட்ட உடமைகளை எடுத்துச்செல்ல முயன்ற ஊர்க்காவல் படை காவலரை மறித்து பொதுமக்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

நாகூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்தவர்கள் காரில் தங்களது பணப்பை உள்ளிட்ட உடைமைகளை வைத்துவிட்டு கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த நாகை மாவட்டம் பணங்குடி பகுதியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் அரவிந்த் என்பவர், அவர்களின் பணப்பை உள்ளிட்ட உடைமைகளை தனது இரு சக்கர வாகனத்தில் மாட்டிகொண்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

image


Advertisement

அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவரை மறித்து வாக்கு வாதம் செய்ததுடன், வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ காட்சியால் நாகை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்களின் உடைமைகளை ஊர்க்காவல் படை வீரர் ஒருவரை எடுத்துச்சென்று தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close