Published : 08,Aug 2017 02:12 AM

2 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய சந்திர கிரகணம் - பார்த்து ரசித்த மக்கள்

Lunar-eclipse--visibled-in-India--yesterday-night

2015ஆம் ஆண்டிற்கு பின் நேற்றிரவு வானில் தோன்றிய சந்திர கிரகணம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. சென்னை பிர்லா கோளரங்கத்தில் நள்ளிரவில் திரண்ட ஏராளமான மக்கள் சந்திர கிரகண நிகழ்வை கண்டு ரசித்தனர்.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும், ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே‌ பூமி பயணிக்கும்போது, சூரியனில் இருந்து நிலவுக்குச் செல்லும் ஒளியை பூமி தடுப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு நிலா இருளடைந்து காட்சியளிக்கிறது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த சந்திர கிரகணம், நேற்றிரவு 10.52 மணிக்கு தொடங்கியது. பூமியின் நிழல் நிலவின் மீது விழத் தொடங்கியதை அடுத்து, வட்ட வடிவில் அழகாக கட்சியளித்த நிலா கீழ்ப்புறத்தில் இருந்து 25 சதவீதம் இருளடைந்து காணப்பட்டது. இதனை வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்தது என்றபோதில், சென்னை பிர்லா கோளரங்கத்திற்கு நேரில் வந்த ஏராளமான மக்கள் தொலைநோக்கிகள் மூலம் சந்திர கிரகண நிகழ்வை கண்டு ரசித்தனர்.

சூரிய மற்றும் சந்திர கிரகண நேரங்களில், உணவருந்தக் கூடாது, கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது என்பது போன்ற நம்பிக்கைகள் அவரவரின் எண்ணங்கள் சார்ந்தது என்றும் அவற்றிற்கு விஞ்ஞான்ப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இணை இயக்குநர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்