[X] Close

பெரம்பலூரில் நாளை முதல் ஆக. 10ஆம் தேதிவரை ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா வைரஸ்

Curfew-in-Perambalur-from-tomorrow-till-August-10--District-Collector-s-announcement

பெரம்பலூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமலாகிறது. வரும் 4 ஆம்தேதி முதல் 10ம் தேதி  வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா அறிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியரே ஊரடங்கை அமல்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர் பேரூராட்சி, லப்பைகுடிகாடு பேரூராட்சி பகுதிகளில் வரும் 4 ந்தேதி முதல் 10ம் தேதிவரை 7 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் நகராட்சியில் சிவன்கோவில் முதல் வானொலிதிடல் வரை, வானொலி திடல் முதல் பழையபேருந்து நிலையம் வரை, பழையபேருந்து நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை, பழையபேருந்து நிலையம் மார்க்கெட் பகுதி, போஸ்ட் ஆபிஸ்தெரு,கடைவீதி என்.எஸ்.பி ரோடு, பழையபேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகள் என 7 இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement

image

மேலும் அரும்பாவூர் பேருராட்சியில் தழுதாழை சாலை முதல் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகம் வரை, பாலக்கரை முதல் அ.மேட்டூர் வரை என இரண்டு பகுதிகளிலும், லெப்பைகுடுகாடு பேரூராட்சியில் மாட்டுப்பாலம் முதல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த பகுதிகள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும். இப்பகுதிகளில் மருந்தகம், பால், காய்கறிகடை போன்ற அத்தியாவசிய கடை தவிர மற்ற வணிகநிறுவனங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவையும் உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான கட்டுப்பாட்டுவிதிமுறைகளை பின்பற்றி 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிமுறைகள் கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வருவாய் வட்டாட்சியர்கள், பெரம்பலூர் நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

மேலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 11ஆயிரத்து 497 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் தற்போது 108 சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 223 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement
[X] Close