Published : 07,Aug 2017 04:39 PM

வைகை ஆற்றை தூய்மைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

High-Court-orders-to-clean-Vaigai-river

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறப்புக் குழு அமைத்து வைகை ஆற்றை தூய்மைப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வைகை ஆற்றில் 452 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது என்றும், மதுரை மாநகராட்சியில் மட்டும் 36 இடங்களில் கழிவு நீர் கலப்பதாக ம‌னுவில் குறிப்பிட்டு இருந்தார்.

‌தமிழக அரசின் பராமரிப்பு குறைபாட்டினால் வைகை ஆறு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முதற்கட்டமாக மதுரை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட ஆரப்பாளையம் முதல் விரகனூர் வரை வைகை அணையைத் தூய்மைப்படுத்த உத்தரவிட்டனர்.

மேலூர் வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ‌மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தனித்தனியாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்