[X] Close

திண்டுக்கல்: வழி கேட்ட லாரி டிரைவரிடம் வழிப்பறி - 3 பேர் கைது

குற்றம்

robbery-held-near-at-Dindigul

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, வழி கேட்ட லாரி டிரைவரிடம் வழி சொன்னதற்காக பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

துரை என்பவர் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு லாரியில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர்களிடம் தான் செல்லும் இடத்திற்கு வழி கேட்டுள்ளார். அந்த இளைஞர்கள் துரையிடம் போகும் வழியை விவரமாக கூறியுள்ளனர். தொடர்ந்து, அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு டிரைவர் துரை கிளம்பியுள்ளார். 'என்ன கிளம்பிடீங்க?' என கேட்டு துரையை அந்த இளைஞர்கள் தடுத்துள்ளனர்.

"அட்ரஸ் சொன்னதுக்கு நூறு ரூபாய் காசு கொடுத்துட்டு போங்க” என காசு கேட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த துரை, "விலாசம் சொன்னதுக்கு 100 ரூபாயா?” என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இளைஞர்கள் விடாப்பிடியாக துரையிடம் இருந்த செல்போன் மற்றும் 2,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இச்சம்பவம் தொடர்பாக டிரைவர் துரை வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட, கட்டக்காமன்பட்டியைச் சேர்ந்த செந்தில், சங்கர், உமா மகேஸ்வரன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் 2 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.


Advertisement

Advertisement
[X] Close