ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷேன் வார்னே தற்போது லண்டன் ஸ்பிரிட் எனும் டி20 அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அந்த அணியினருடன் இருந்தவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஷேன் வார்னே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணியின் மற்ற வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் ஷேன் வார்னே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com