புதுச்சேரியில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறையின் திட்டங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து உணவுப்பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகை காலத்தில் இலவசமாக சர்க்கரை கிடைக்கும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய உணவு தானியங்கள் இலவசமாக கிடைக்கப்பெறுவர். இவை தொடர்பாக அமைச்சரவை சார்பில் அனுப்பப்பட்ட கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற இலவசத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு பல முறை அனுப்பப்பட்ட கோப்புகளை அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஏற்கவில்லை என்பது நினைவுக் கூறத்தக்கது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai