[X] Close

'தி ஃபேமிலி மேன்' இயக்குனர்களின் புதிய வெப் சீரிஸில் நடிக்கிறார் விஜய் சேதுபதி

சினிமா

Actor-Vijay-Sethupathi-is-starring-in-the-web-series-of-The-Family-Man-Series-directors

'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே, அமேசான் பிரைம் தளத்திற்கு இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

இந்த புதிய வெப் சீரிஸில் நடிகை ராஷிகண்ணா மற்றும் ஷாகித் கபூரும் நடிக்கிறார்கள்.

image


Advertisement

திரைத்துறையை கொரோனா பேரிடர் புரட்டிப்போட்டுள்ள நிலையில் அந்த துறையை நம்பியுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஓரளவு உதவி வருகிறது வெப் சீரிஸ். தற்போது தமிழ் உட்பட பல மொழிகளிலும் இந்த வெப் சீரிஸில் வெள்ளித்திரை நடிகர்கள் முகம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

'தி ஃபேமிலி மேன்-2'  வெப் சீரிஸில் இலங்கை தமிழர்கள் தொடர்பான காட்சிகளுக்கு தமிழகத்தில் இருந்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வெப் சீரிஸுக்கே தடை விதிக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தினர். இருப்பினும் பல்வேறு விமர்சனங்களுக்கு நடுவே அந்த வெளியான அந்த வெப் சீரியஸின் இயக்குநர்களுடன் விஜய் சேதுபதி இணைகிறார்.

ஏற்கனவே இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக பல்வேறு கட்ட பணிகள் முடிந்த நிலையில், தமிழத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அதில் இருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close