Published : 01,Aug 2021 07:06 PM

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தார் பி.வி.சிந்து : குவியும் வாழ்த்துகள்

PV-Sindhu-won-Bronze-in-Tokyo-Olympics-Women-s-Singles-Badminton

டோக்யோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி. சிந்து முதல் கேமை 21க்கு13 என வசமாக்கினார். பதக்கம் வென்ற ஆக வேண்டும் என்ற வேட்கையில் விளையாடிய பி.வி.சிந்து 2-வது கேமை 21க்கு15 என்ற கைப்பற்றினார்.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“எங்கள் மகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஊக்கமளித்து உற்சாகப்படுத்தினார்” என தெரிவித்துள்ளார் சிந்துவின் தந்தை ரமணா. விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்