Published : 07,Aug 2017 01:44 PM
வெள்ளத்தில் தத்தளிக்கும் வியட்நாம்: மக்கள் வீடுகளை இழந்து தவிப்பு

வியட்நாமின் வடக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
வியட்நாமின் வடக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 26 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 260 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஆங்காங்கே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த குடியிருப்புகள் மற்றும் போக்குவரத்தை சீர் செய்ய மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.