[X] Close

உ.பி: பகத்சிங் தூக்கில் தொங்குவது போல் ஒத்திகை பார்த்த 10வயது சிறுவன் பரிதாப மரணம்

இந்தியா

Re-enacting-Bhagat-Singh-s-execution--10-yr-old-accidentally-hangs-himself-in-UP-village

உத்தரப்பிரதேச மாநிலம் புதான் நகரில், சுதந்திர தின விழா நாடகத்திற்கான ஒத்திகையின் போது, சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் தூக்கிலிடப்படுவதுபோன்ற காட்சியில் நடித்த 10 வயது சிறுவன், எதிர்பாராத விதமாக தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.


Advertisement

குன்வர்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட பாபட் கிராமத்தில் வசிப்பவரான பூரே சிங்கின் மகன் சிவம், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து நாடகத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காட்சிக்கான ஒத்திகையைத்தியபோது, சிவம் கழுத்தில் ஒரு கயிற்றை கட்டினார், இருப்பினும், அவர் நின்றிருந்த ஸ்டூல் நழுவி அவர் தூக்கில் தொங்கினார் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.  இதனைப்பார்த்த மற்ற குழந்தைகள் பீதியடைந்து உதவிக்காக அலறினார்கள், அதைத் தொடர்ந்து சில உள்ளூர்வாசிகள் அங்கு வந்து, கயிற்றை வெட்டிய பின் சிவத்தை கீழே இறக்கினார்கள், ஆனால் அவர் அதற்குள் இறந்துவிட்டார் என்று அவர்கள் கூறினர்.

குன்வர்கான் காவல் நிலையத்தின் அதிகாரிகள் விசாரணைக்கு சென்றபோது, சிறுவன் எப்படி இறந்தான் என்பது குறித்து எந்த தகவலையும் கொடுக்க குடும்ப உறுப்பினர்கள் மறுத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் சிறுவன் உயிரிழந்த பிறகு குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்தனர் என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close