Published : 07,Aug 2017 01:42 PM

ரஷ்யாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு நினைவிடம்

Memorial-to-Fidel-Castro-in-Russia

ரஷ்யாவின் பிராந்தியமான க்ரிமியாவில் கியூபா முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கருங்கடலை ஒட்டிய ரஷ்யாவின் க்ரிமியா பிராந்தியத்தின் தெற்குமுனைப் பகுதியில் இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு கல்வெட்டும் நினைவு இருக்கையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சோவியத் ஒன்றியத்துடன் காஸ்ட்ரோ கொண்டிருந்த நெருக்கமான உறவை நினைவுபடுத்தும் விதமாக அவருக்கு க்ரிமியா மரியாதை செய்திருக்கிறது.

க்ரிமியாவின் அமைச்சர் டிமிட்டி போலன்ஸ்கி கூறும்போது, ஃபிடல் கேஸ்ட்ரோவின் நினைவிடத்திற்கு 4 கிலோ மீட்டர் நடைபாதை அமைக்கப்படும் என்றும், இது அவருக்கு செய்யும் மரியாதை என்றும் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்