Published : 07,Aug 2017 01:27 PM

ஜப்பானை அச்சுறுத்தும் ‘நொரு’ புயல்: 230 விமானங்கள் ரத்து

-Nu--storm-threatens-Japan--230-flights-canceled

ஜப்பானை அச்சுறுத்தி வரும் ‘நொரு’ புயலால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜப்பானை அச்சுறுத்தி வரும் ‘நொரு’ புயல் வலுவிழந்து வரும் நிலையில் அந்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாட்டின் முக்கிய தீவான ஷிகோகுவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புயல் காரணமாக நேற்று வரை 2 பேர் உயிரிழந்தனர். அதனை அடுத்து உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஜப்பானில் இந்த ஆண்டு ஏற்பட்ட புயல்களிலேயே ‘நொரு’ புயல்தான் மிகவும் வலுவானது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்